ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் நாசவேலை

சென்னை:  ஆம்பூர் அருகே ரயில்பாதையில் தண்டவாளத்தின் வளையங்களை அகற்றி நாசவேலை நடந்துள்ளது. அந்த பாதையில் சென்ற ரயில்கள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் தப்பியது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் - விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதை களை தினமும் ஆய்வு செய்யும் டிராக்மேன் வழக்கம்போல் நேற்று காலை 7.30 மணியளவில் தண்டவாளங்களை பரிசோதனை செய்தபடியே  சென்றுள்ளார்.அப்போது சென்னை செல்லும் பாதையில் ஓரிடத்தில் தண்டவாளங்களை நெகிழாமல் உறுதியாக இருக்க இறுக்கிப்பிடிக்கும் வளையங்கள் (கிளிப்) அகற்றப்பட்டிருந்தன. இப்படி சுமார் 50 அடி நீளத்திற்கு மொத்தம் 25 வளையங்கள் அகற்றப்பட்டிருந்தன.

 அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிராக்மேன் உடனடியாக ஆம்பூர் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். வளையங்கள் அகற்றப்பட்டால் தண்டவாளம் நகர்ந்துஇ ரயில் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் சோதனை செய்ததில்இ அகற்றப்பட்ட வளையங்கள் ரயில் பாதையில் உள்ள ஜல்லிகளுக்கு அடியில் பள்ளம் தோண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அதையடுத்துஇ அவற்றை எடுத்து மீண்டும் பொருத்தும் பணியில் அதிகாரிகளும்இ ஊழியர்களும் ஈடுபட்டனர். பின்னர் அந்த இடத்தில் ரயில் மெதுவாக இயக்க அனுமதிக்கப்பட்டது. காலை நேரத்தில் சென்னை செல்லும் பாதையில்தான் அதிகமாக ரயில்கள் செல்லும். எனவே விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூகவிரோதிகள் நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

1 Comments